அரசு நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பு : தி.மு.க. நிர்வாகி கைது..!!

நாகை :
நாகை மாவட்டத்தில் அரசு நிலங்களை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்த தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க.வின் முக்கிய இதழான முரசொலி அலுவலக கட்டிடம் இடப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது தெரியாமல் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் திணறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தி.மு.க.வை விடாபிடியாக பா.ம.க.வும் பிடித்துள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், தலைமையை போலவே தொண்டனும் என்பதற்கு உதாரணமாக நிகழ்ந்துள்ள சம்பவம் தி.மு.க.வினரை வெளியயே தலை காட்ட முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் சுனாமி குடியிருப்புகளுக்கு சொந்தமான இடங்களை கீழையூர் தி.மு.க. ஒன்றிய செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்து விட்டதாக அ.தி.மு.க. நகர செயலாளர் தங்க கதிரவன் புகார் அளித்தார்.
அதாவது, வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவில், புனித வேளாங்கண்ணி திருத்தல் பேராலயம் உள்ளிட்டவற்றிற்கு சொந்தமான இடங்களையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
தங்க கதிரவனின் புகாரின் பேரில் 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க. நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசனை தேடி வந்தனர். இதையடுத்து, தலைமறைவாகியிருந்த அவரை சென்னையில் கைது செய்த போலீசார், நாகை அழைத்து வருகின்றனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!