உத்திரமேரூரில் தனியார் தொழிச்சாலை ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கூறி வேலையை புறக்கணித்து போராட்டம்.

உத்திரமேரூர்:-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஏ.பி.சத்திரத்தில் லோட்டஸ் என்கின்ற தனியார் தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது,

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலை அதிகாரிகளால் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்படுவதாகவும், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், தொழிலாளர் நலச்சட்டங்கள் எதையும் முறையாக கடைபிடிக்கவில்லை எனவும், இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும் கூறி நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இந்த போராட்டமானது சிஐடியு தொழில்சங்க மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது, இதில் சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் கண்டனவுரையாற்றினார். இந்த போராட்டத்தில் பணியாளர்கள் உட்பட சிஐடியு வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்: பாபி – உத்திரமேரூர்

மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!