அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஜுனியர், சீனியர் என்பது கிடையாது : அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரை : அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் ஜூனியர், சீனியர் என்பது கிடையாது, அனைத்து சமுதாயத்தினருக்கும் முன்னுரிமை என அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை துவரிமானில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி, ஆழ்துளை கிணறு, சுகாதார வளாகம் ஆகியவைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை பயோ மெட்ரிக் பதிவில் சர்வர் பிரச்சினை வந்தால் பிற ஆவணங்களை கொண்டு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், பயோ மெட்ரிக் பதிவை காரணம் காட்டி பொருட்கள் வினியோகத்தை நிறுத்த கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு சொல்லி வருகிறோம், அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. அறிவித்த திட்டங்களை விட கூடுதலாக திட்டங்கள் கொண்டு வந்து உள்ளோம் என கூறினார்.
திமுகவில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தியதால் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, வழிகாட்டுதல் குழு அனைத்து சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவை ஒருங்கிணைக்க இன்னும் நிறைய குழுக்கள் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவில் ஜூனியர், சீனியர் என்பது கிடையாது, அதிமுகவில் உழைப்பாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறினார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!