குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: வெளிமாநில பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் வெளிமாநில பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற திருவிழாவான குலசேகரபட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவது குறித்து அரசு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினர் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முடிவுகள் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இந்த ஆண்டு வருகிற 17ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 17ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், 26 ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 27ஆம் தேதி நடைபெறும் கொடி இறக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வழக்கமாக கடற்கரையில் நடைபெறும் சூரசம்காரம் நிகழ்ச்சியானது covid-19 பாதுகாப்பு விதிமுறைகள் காரணத்திற்காக இந்த ஆண்டு கோவில் பிரகாரத்திலேயே நடைபெறுகிறது. கோவில் நிகழ்ச்சிகள் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாமி தரிசனத்துக்கான அனுமதிச்சீட்டு கோவில் நிர்வாகத்தால் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்கள் கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தகுந்த நேரம் இடைவெளியின் அடிப்படையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு கடற்கரையில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. திருவிழாக்காலங்களில் கோயிலைச் சுற்றி அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது.
கொடியேற்ற நாளை தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சிக்காக முத்தாரம்மன் கோவிலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 400 தசரா குழுவின் சார்பாக நிர்வாகிகள் இரண்டு பேர் வந்து கோவில் அலுவலகத்தில் காப்புகளை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். பதிவு செய்யப்படாத தசரா குழுவை சேர்ந்தவர்கள் வருகிற 14-ஆம் தேதி வரை தங்களது தசரா குழுக்களை முத்தாரம்மன் கோவில் அலுவலகத்தில் பதிவுசெய்து நிர்வாகிகள் மூலமாக காப்புகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆண்டு கோவில் தசரா திருவிழாவிற்கு வெளிமாநில மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக கோவில் நிகழ்ச்சிகளை யூடியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல வழக்கம்போல பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுகாதார, அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. பாதுகாப்பு திருவிழா பாதுகாப்புப் பணியில் 1500 போலீசார் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!