திருப்பூர் : தாராபுரம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பொக்லைன் எந்திரத்தில் கிளீனராக வேலை செய்து வருகிறான். இந்த நிலையில் அந்த பொக்லைன் எந்திரம் மூலனூர் பகுதியில் உள்ள கிராமத்தில் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 7 வயது சிறுமியை, கிளீனரான 16 வயது சிறுவன் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி வழக்குப் பதிந்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.