மாற்றுத்திறனாளி ஜோடிக்கு இலவச திருமணம் : 101 சீர்வரிசைகளுடன் ‘நல்லறம்‘ எஸ்.பி அன்பரசன் நடத்தி வைத்தார்!!

கோவை : நல்லறம் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளி ஜோடிக்கு 101 சீர் வரிசைகளுடன் இலவச திருமணத்தை திரு.எஸ்.பி.அன்பரசன் நடத்தி வைத்தார்
கோவையில் செயல்பட்டு வரும் நல்லறம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த மாற்று திறனாளி தொழிலாளி சுப்ரமணியம், தாய்,தந்தை இல்லாத ஆதரவற்ற இவருக்கு திருமணம் நடத்தி தர கோரிஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் திரு.அன்பரசன் சந்தித்து உதவி கேட்டனர்.
இந்நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக நல்லறம் அறக்கட்டளை சார்பாக செய்து ,கோவை ஆர்.எஸ்.புரம் அம்மா ஐ‌.ஏ.எஸ் அகடமி அருகிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில் சுப்ரமணியத்திற்கும் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவருக்கும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி அன்பரசன் தலைமையில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மணமக்களுக்கு வீட்டுக்குத் தேவையான கட்டில்,பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 101 வகை சீர்வரிசை பொருட்கள் புதுமணத் தம்பதியினருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், முருகவேல்,அஞ்சு,ரோட்டரி மணிகண்டன், குமார் உட்படபுதுமண தம்பதியினரின் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!