MLA S.தங்கப்பாண்டியன் விருதுநகர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!!

இராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் சாஸ்தா கோவில் அணையை திறக்கக்கோரி MLA-விடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையை திறக்க வேண்டியும் மற்றும் இரயில்வே மேம்பாலப் பணிகள் தொடர்ந்து நடைபெற நிலம் கையகப்படுத்தி வழங்கி பணியை விரைவுபடுத்தக்கோரியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களை MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்
அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை MLA அவர்கள் நேரில் சந்தித்து இராஜபாளையம் இரயில்வே மேம்பாலப் பணிக்காக விரைவில் நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்  தற்போது அதன் நிலை என்னவென்று கேட்டறிந்தார்.. இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் உடனிருந்தார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!