நலன் தரும் நவராத்திரி விழா..!!

முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் ஒரு ரூபமாக மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் நவராத்திரி.
ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகவே அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
இப்பேறு பெற்ற இவ்விழாவினை செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த லஷ்மிசந்திரசேகரன் தம்பதியினர் இல்லத்தில் 3 தலைமுறைகளை கடந்து இன்றும் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
காலமாற்றத்திற்கு ஏற்ப பல கைவண்ணங்களை சிற்பங்களாகவும் புகைப்பட வடிவிலும் வரலாற்று நிகழ்வுகளை அறிந்திடும் வகையிலும், ஆன்மீக வழிகாட்டுதலை கடைபிடிக்கும் நோக்கிலும் கொலுவினை சிறப்பாக அமைத்துள்ளனர்.
ஆண்டுதோறும்  தங்கள் தனித்திறன் மூலமாக அறிய தகவல்களை மக்களுக்கு எடுத்துறைக்க கலைநயத்துடன் அதன் மாதிரிகளை அமைத்து கொலுவினை கொண்டாடிவரும் இவர்கள் குடும்பத்தினர் இந்த ஆண்டு மராத்திய குல மன்னரான சத்ரபதி சிவாஜியின் வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள ராய்கட்கோட்டையை  தத்ரூபமாக மாதிரி வடிவத்தில் அமைத்துள்ளனர்.  மேலும் பண்டரிபுரம் ஆலைய மாதிரி உட்பட பல பொம்மைகளை கொலுவில் நிறுத்தி இந்து பாரம்பரிய கலாச்சாரத்தினை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள சிறப்பாக நவராத்திரி விழாவினை கொண்டாடிவருகின்றனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!