முதுகுளத்தூரில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: அகழாய்வு செய்ய வலியுறுத்தல்..!!

முதுகுளத்தூர் அருகே கண்மாய் பணியின்போது முதுமக்கள் தாழி, மனித எலும்புகள், ஓடுகள் கண்டறியப்பட்டதால், அகழாய்வு செய்ய கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் கண்மாயில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று கண்மாயினை ஜேசிபி மூலம் தோண்டினர். 7 அடிக்கும் மேல் தோண்டியபோது முதுமக்கள் தாழி, மனித எலும்புகள், மண்பானை ஓடுகள் தென்பட்டுள்ளன.
இதனையடுத்து, கமுதி வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், 1990ம் ஆண்டு தோண்டும்போது முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருட்கள் தென்பட்டதால், தொல்லியியல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த ஆய்வு பணி கிடப்பில் போடப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் பண்டைய கால பொருட்கள் தென்படுவதால், தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!