சக்தி தரும் சரஸ்வதி பூஜை

நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக ( நவமி) சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.
சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை:-
வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ படை‌க்க‌ப்பட பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் கு‌ங்கும‌ம் இட வேண்டும்.
சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தை பூ‌க்க‌ளால் அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.
சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும்.
சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும்.
படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும்.
கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும்.
கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.ஆனந்தம் தரும் ஆயுதபூஜை
காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு..பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள் உட்பட எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
நாம் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும், இயந்திரங்களையும் சுத்தம் செய்து, அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி படங்களை வைத்து அதற்கு முன் தேங்காய், பழம் வைத்து விளக்கேற்ற வேண்டும். மறுநாள் காலை அதாவது நவமியன்று மறுபூஜை செய்து அதனை கலைக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!