வேலூர் : கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்து மலை பகுதியில் வீசி சென்ற கள்ளகாதலனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வள்ளிமலை மலை மீதுள்ள சமனர் குகையின் அருகே அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக மேல்பாடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் ஆகியோர் மலை மீது சென்று குகையினுள் பார்த்த போது ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி ஆற்காடு பகுதியை சேர்ந்த வத்சலா (வயது 55) என்பவர் காணவில்லை என வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் விசாரணை துவங்கிய போது இவருக்கும் அணைக்கட்டு அருகேயுள்ள கீழ்கொத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அன்பு என்பவருக்கும் நீண்ட வருடங்களாக கள்ளதொடர்பு இருந்து வந்ததும் தெரியவந்தது.
அன்பு என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி வத்சலாவை வள்ளிமலைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துவிட்டு தனது துண்டால் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பிணத்தை குகையில் விட்டுவிட்டு வந்ததை அன்பு ஒப்புகொண்டார்.
வச்லாவின் கணவர் இறந்த பல ஆண்டுகளானதால் இவர் மேஸ்திரி அன்பு உடன் கள்ளதொடர்பில் இருந்ததும் அன்புவை வத்சலா தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் அன்பு வச்லாவை கொலை செய்ததை ஒப்புகொண்டார்.
இதுகுறித்து மேல்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அன்புவை கைது செய்தனர் . உடல் அழுகிய நிலையில் இருப்பதால் மலை மீதே உடற்கூறு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. பெண் காணாமல் போன 16 நாட்களுக்கு பின்னர் இவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது