ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி எப்போது தெரியுமா..?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியின் இடம் மற்றும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏறத்தாழ முக்கால்சவாசி போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. முன்னதாக, இத்தொடரின் லீக் போட்டிகளுக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்கான இடம் மற்றும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவ.,5ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில், முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மோத இருக்கின்றன. அதேபோல, அபுதாபியில் எலிமினேட்டர் ஆட்டம் நவ.,6ம் தேதி நடக்கிறது. இதில், புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களை பிடித்துள்ள அணிகள் மோதுகின்றன.
இதில், வெற்றி பெறும் அணி, நவ.,8ம் தேதி நடைபெறும் 2வது குவாலிபையர் போட்டியில் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியுடன் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்றன.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!