8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர்..போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு 3 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான 63 வயது முபாரக் அலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் முதியவர் முபாரக் அலியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை முதியவர் முபாரக் அலி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!