அரசியலுக்கு வராவிட்டாலும் ரஜினிக்கு எப்பவும் மவுசுதான் : டிரெண்டிங்கில் ‘#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்!!

சென்னை : அரசியலுக்கு வருவது தொடர்பாக தகுந்த நேரத்தில் அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் இன்று கூறிய நிலையில், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளதால், நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் அரசியல் களம் காணுவார் என அவருக்கு நெருக்கமான தலைவர்கள் கூறி வந்தனர். இதனிடையே,
ரஜினிகாந்த் வெளியிட்டது போன்ற அறிக்கை அண்மையில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தது. அதில், கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாலும், தற்போதைக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாகவும், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருப்பதால், தொற்று எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த அறிக்கையை தான் வெளியிட வில்லை எனக் கூறி மறுப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலையை புரிந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!