ஹெலிகாப்டரில் திருமணத்திற்கு வந்த பிரமுகர் : சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் எழுந்த புதுசிக்கல்..!!

ஆந்திராவில் திருமண நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரமுகரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் புதிய சிக்கல் எழுந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் கிராமத்தில் ஜனார்த்தன் ரெட்டி என்பவர் குடும்ப திருமண விழா கடந்த 27ம் தேதி நடைபெற்றது. கோட்டீஸ்வர ராவ் என்பவர் கர்நாடக மாநிலம் தவனகிரியை சேர்ந்த சர்க்கரை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அன்று ரேவூர் கிராமத்திற்கு வந்தார். ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தேவையான ஹெலிபேட் அமைக்க ரேவூர் கிராம அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அனுமதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், தங்கள் ஊருக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது தொடர்பான காட்சிகளை அந்த ஊர் மக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர். ரேவூர் கிராமத்திற்கு ஹெலிகாப்டர் வந்தது தொடர்பான எந்தவித தகவல்களும் இல்லாமல் இருந்த நெல்லூர் மாவட்ட உயர் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பரவிய தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
விசாரணையில் எவ்விதமான முன் அனுமதியும் இல்லாமல் கோட்டீஸ்வர ராவ் ரேவூர் கிராமத்திற்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது உறுதி செய்யப்பட்டது. மேலும் சிவில் விமான போக்குவரத்து துறைக்கு வானில் ஹெலிகாப்டர் பறந்தது தெரியாமல் போனது எப்படி கேள்வியும் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் உரிமையாளரான சர்க்கரை தொழிற்சாலை நிறுவனம் வானில் பறப்பதற்கு தேவையான அனுமதி இல்லாத நிலையில் ஹெலிகாப்டரை அனுப்பி வைத்தது எப்படி என்ற கேள்வியும் இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட போலீசார் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய கோடீஸ்வர ராவ் மற்றும் அவர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர், ஹெலிகாப்டர் உரிமையாளரான சர்க்கரை தொழிற்சாலை அதிபர், ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி அளித்த தலைமை ஆசிரியர் ஆகியோர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!