ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும்……. பாஜக பிரமுகர் பரபரப்பு பேச்சு!!

சேலம் : ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் பிஜேபிக்குதான் ஆதாயம் என பாஜகவின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..
பாஜகவின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சேலம் மாதவம் மகாலில் இன்று நடைபெற்றது. மாநில பிரச்சார பிரிவு துணைத் தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், எதிர் வரும் சட்டமன்ற தேர்தலின் பிரசார வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குமரி கிருஷ்ணன், தமிழகத்தில் திமுகவை அழிக்கவே இந்த வேல் யாத்திரை நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தற்போது பாஜக வளர்ந்து வருவதாகவும், திமுக உடைந்து வருவதாகவும் தெரிவித்த அவர் யாரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை எனவும், லஞ்ச அரசியல் செய்பவர்களே பிரபலங்களை விலைக்கு வாங்குவார்கள் என தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாஜகவுக்குத்தான் ஆதாயம், ரஜினியின் ஆதரவாளர்கள் பாஜகவின் ஆதரவாளர்களே என தெரிவித்துள்ளார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!