மதத்தை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சி திமுக : உதயநிதி ஸ்டாலின் பேட்டி!!

காஞ்சிபுரம் : பாரதிய ஜனதா கட்சி எப்போதும் மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி என்றும், திமுக மதத்தை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் தனியார் ஹோட்டல் உள்அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல ஆண்டுகளாக திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளவர்களுக்கு பொற்கிழிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது :- தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஆறு மாதங்களில் ஆட்சிமாற்றம் வரப்போவது உறுதி ஆகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே இளைஞர் அணியினர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்றி தேர்தலில் வெற்றிபெற வேண்டும். ஆறு மாதங்களில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர போவது உறுதியாகி விட்டது.
பாஜக நடத்தும் வேல்யாத்திரை மதத்தைச் சார்ந்த அரசியல் நடத்துவதாக உள்ளது. தமிழக அரசுக்கு மாணவர்களின் உயிர் மீது சிறிதும் அக்கறை இல்லை. அதனால்தான் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறப்பதாக தமிழக அரசு அறிக்கை விட்டது. தலைவர் முக ஸ்டாலின் அறிக்கைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு பின்வாங்கி விட்டது. இதன் மூலம், மாணவர்கள் உயிர் மீது தமிழக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது தெரிய வருகிறது, எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- பள்ளிகள் திறப்பது 16 ஆம் தேதி என நேற்று அறிவித்திருந்தது. இன்று தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்து பாதுகாப்பான சூழ்நிலை அமையும் வரை பள்ளி திறப்பதை தள்ளி வைக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!