குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மனநலம் பாதிக்கபட்ட ஆங்காங்கே சுற்றிதிரிந்த நபரின் தகவலை அறிந்த தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நபர்கள் அவரை மீட்டு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். மாவட்ட பொருளாளர் நிஜம்யுதின் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சாபுதீன் துணை தலைவர் சான்பாஷா ஆகியோர் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொதுமக்களுக்கு மனிதநேயத்துடன் பல்வேறு நல உதவிகளை செய்து வரும் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமுகவினரை குடியாத்தம் நகரவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.