திருவள்ளூர் : நிவர் புயல் காரணமாக கடலோர மக்களை பாதுகாப்பாக மீட்ட வருவாய்துறையினர் முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
தமிழகத்தில் நிவர் புயல் மிரட்டி வரும் நிலையில், அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர, கடலோர மக்கள் பாதுகாப்பாக மீட்க பேரிடர் மேலாண்மை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், மாங்கோடு, அண்ணாமலைச்சேரி, பழவேற்காடு உள்ளிட்ட கடற்கரையோர வசிக்கும் 70 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் நடவடிக்கையை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புயல் பாதுகாப்பு மையங்களில் மக்களை தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உணவு , குடிநீர், பால் பாய் பெட்ஷீட் உள்ளிட்ட தேவைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.