முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற திருமணம் : அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்பு!!

சேலம் : தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர். இளங்கோவனின் இல்லத் திருமண விழா ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திருமணத்திற்கு தலைமை தாங்கி மாங்கல்யம் எடுத்து வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அதை தொடர்ந்து மணமக்கள் பிரவீன் குமார், மோனிகா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அதிமுகவின் மூத்த நிர்வாகி பொன்னையன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!