கண்ணை மறைத்த சூதாட்டம்: இளைஞரை கொடூரமாக அடித்துக்கொன்ற கும்பல்…!!

விழுப்புரம்: சூதாட்டத்தின்போது ஏற்பட்ட பிரச்சனையில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே நன்னாடு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனசீலன் என்பவர் மெடிக்கல் ரெப்ரஸ்ன்டேடிவ்வாக பணியாற்றுகிறார். இவரது மனைவி எழிலரசி இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது ஒன்றரை வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளார்.
 
 
கணவன் மனைவி இடையே தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் எழிலரசி தனது குழந்தையோடு தாய் வீடு சென்று விட்டார். தனசீலன் தனியாக வீட்டில் இருந்து வந்தார். இவரது தாய் மங்கலட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியே வசிக்கிறார். இந்நிலையில் இரவு தனசீலன் வீடு இருண்ட நிலையில் இருந்ததை கண்டு, அவரின் சகோதரர் சத்தியமூர்த்தி மின்விளக்குகளை போட சென்றுள்ளார். அப்போது, முகங்கள் சிதைக்கப்பட்டு, அதன் மூலம் தலையணை மூடிய நிலையில் தனசீலன் அங்கு கொலை செய்யப்பட்டு, கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்து அடைந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி., நல்லசிவம் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் கொலையான தனசீலன் சடலத்தை போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனசீலன் தினந்தோறும் குடிப்பதோடு அப்பகுதியில் லோடுமேன்களாக உள்ள சில நண்பர்களோடு சூதாட்டம் விளையாடியதும் அவர் போதையில் சூதாடியதும் அதில் ஏற்பட்ட பிரச்னையில் அவர்கள் சவுக்கு தடியால் முகம் மற்றும் தலை பகுதியில் தாக்கி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள தனசீலன் நண்பர்கள் ஐந்து பேரிடம் தாலுகா போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். சூதாட்ட பிரச்சனையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நன்னாடு கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!