கடந்த சில தினங்களாக ஏறியும், இறங்கியும் வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை எட்டி விடும் என்ற அச்சம் எழுந்து வந்தது.
கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை, இன்றும் உயர்வுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ரூ.4,778-க்கும், சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.60 உயர்ந்து ரூ.74.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.