பாஜகவில் இணைகிறார் மநீம கட்சியின் பொதுச்செயலாளர்: அதிர்ச்சியில் கமல்ஹாசன்…!!

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் இன்று பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகளுடன் மக்களவை தேர்தலை ஏற்கனவே சந்தித்த கமல்ஹாசன் தற்போது தனது நண்பர் ரஜினியையும் எதிர்கொண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்.
 
 
தொடர்ந்து மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் சமீப காலமாக எம்ஜிஆரை தனது அரசியல் பயணத்திற்கு துணைக்கு அழைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கமல்ஹாசன் கட்சியிலிருந்து மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் பாஜகவிற்கு இன்று இணைய உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அருணாச்சலம். முன்னதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, நாளை பாஜகவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!