இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில்  ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும்  அங்கு இடம் பெற்றிருக்கும்.
வீடுகளில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் மின்னிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் சென்மேரிஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள  புனித மரியன்னை  தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் உதகையை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
நிழற்படம் – தியோடர்வினோத் – உதகை
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!