கோவையில் கோவில் யானையை முகாமுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தம் : திமுக நிர்வாகியால் பரபரப்பு!!

கோவை : யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அழைத்து சென்ற பேரூர் கோவில் யானையை தடுத்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மேட்டுப்பாளையத்தில் நாளை முதல் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்க உள்ளது. இந்த முகாமிற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் யானையான கல்யாணி யானையை இன்று அதிகாலை தயார் செய்து மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமிற்கு அழைத்துச் செல்ல லாரியில் ஏற்றிய போது ஞானவேல் மற்றும் அவரது மனைவி சுகந்திபிரியா ஆகிய இருவரும் யானையை அழைத்து செல்லும் லாரியை மறித்தனர்.
கல்யாணி யானையின் பாகன், யானைக்கு தொல்லை கொடுப்பதாகவும் கடந்த முறை நடைபெற்ற முகாமில் யானைக்கு மிக அருகில் மக்களை அனுமதித்ததாகவும் கூறினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முகாமிற்கு அழைத்து சென்றால் அங்கு யானையை சரிவர கவனிக்க மாட்டார்கள் என்று கூறிய அவர்கள் கல்யாணி யானையின் பாகனை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதனை தொடர்ந்து யானை அழைத்து செல்லப்பட்டது. தடுத்து நிறுத்திய ஞானவேல் திமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!