சென்னையில் வரும் 21ம் தேதி பொதுக்கூட்டம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு..!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் 21ம் தேதி பொதுகூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டள்ள அறிக்கையில், கட்சியின் 4ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொண்டாடும் வகையில் நமது மகத்தான தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் பிரமாண்டமான மாநாடு வரும் பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மண்ணையும், மொழியையும், மக்களையும் காக்கவே நம் களம் இறங்கி இருக்கிறோம்.
 
 
இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்கு தடை இல்லை நாம் ஒருபோதும் துவளும் தடையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டில் அணிதிரள வேண்டும். மக்கள் உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள், அறம் சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடைசூழ பிப்ரவரி 21ம் தேதி சென்னை நோக்கி அலை அலையாய் திரண்டு வாருங்கள் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!