திருமங்கலம் தொகுதியில் ஏழை எளியோருக்கு அம்மா வீட்டுமனை : ஆர்பி உதயகுமார் வாக்குறுதி!!

மதுரை : திருமங்கலம் தொகுதியில் எனது சொந்த முயற்சியில் ஏழை எளியோருக்கு அம்மா வீட்டுமனை திட்டம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.
திருமங்கலம்  தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மறவன்குளம் வையம்பட்டி தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, சிவன் நகர், காந்தி நகர் ,கப்பலூர், புளியங்குளம், விருச்சங்குளம், விடத்தகுளம், எட்டுநாளி, மைக்குடி, வடகரை, மேலக்கோட்டை உள்ளிட்ட 26 கிராமங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
 
 
முன்னதாக மறவன்குளத்தில் பெருமாள் கோயில், காளியம்மன் கோவில் வழிபாடு செய்து அதன் பின் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் அப்போது ஒரு வீட்டின் அருகே வாக்கு சேகரிக்கும் போது தேநீர் அருந்துமாறு அழைப்பு விட்டனர் அதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார்.
பிரச்சாரத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது : இந்த ஐந்து வருடங்களாக அம்மா புனித அரசின் மூலம் இந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் ,சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு முதன்மை தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்று அம்மா சொல்வார்கள். அதே போல் அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தையும் அம்மா சொல்வார்கள். அதை இரண்டையும் கடைபிடித்து இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார்
இந்த ஐந்தாண்டுகளில் இருமுறை விவசாயிகள் வாங்கிய கடனை அம்மா அரசு ரத்து செய்துள்ளது அதேபோல் 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு 2,500 வழங்கியுள்ளோம்.
 
 
கொரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை சந்திக்கவில்லை ஆனால் திருமங்கலம் தொகுதியில் ஒரு லட்சத்தி பத்தாயிரம் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் கழகத்தின் சார்பிலும் காய்கறி தொகுப்பு, அரிசி தொகுப்பு, கபசுர குடிநீர், முக கவசம் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி எங்கள் உயிரை துச்சமென மதித்து உங்களுக்கு துணையாக நின்றோம். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஆறுதல் கூறாமல் வாக்குக்காக உங்களை தேடி வருவார்கள் நீங்கள் அதற்கு சரியான பதிலடி தர வேண்டும்.
 
 
எதிர்க்கட்சிகள் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று போராட்டம் செய்யப்போவதாக கூறினார்கள். ஆனால் நமது முதலமைச்சரோ தாய்மார்கள் சுமையை குறைக்க விலையில்லாமல் சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
 திமுக ஆட்சி காலத்தில் முதியோர் ஓய்வு தொகை 500 ரூபாய்தான் வழங்கப்பட்டது. ஆனால் அம்மா அரசு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. அதேபோல் இன்றைக்கு தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் இதுபோன்று மக்களை வாழவைக்கும் தேர்தல் அறிக்கை வந்து கொண்டே இருக்கும்
 
 
 திருமங்கலம் தொகுதியில் வறுமையைப் போக்கும் வகையில் அம்மா வீட்டு மனை திட்டம் எனது சொந்த முயற்சியில் நிச்சயம் வழங்கப்படும். அரசு புறம்போக்கு பகுதிகளில் 5 ஆண்டு குடியிருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது, அதே போல் வீடு இல்லாதவர்களுக்கு  தகுதியான இடம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பத்தாண்டுகளில் 27 லட்சம் நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஒருபுறம் வழங்கி வந்தாலும்  எனது சொந்த முயற்சியில் திருமங்கலம் தொகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு நிச்சயம் அம்மா வீட்டு மனை திட்டம் மூலம் வழங்கப்படும் என்றார்.
 
 
ஸ்டாலின் என்றைக்குமே அறிக்கை நாயகன் ஆனால் முதலமைச்சரோ அரசாணை வெளியீடு  நாயகன் சட்டமன்றத்தில் பல்வேறு அரசாணை வெளியிட்டு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.
ஏப்ரல் 6 வாக்குப்பதிவு நாளாகும் அன்றைய நாளில் உங்கள் பொன்னான வாக்குகளை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!