நாசிக் முதல் நாக்பூர் வரை..! புனே முதல் அவுரங்காபாத் வரை..! ஊரடங்கால் வெறிச்சோடும் மகாராஷ்டிர நகரங்கள்..!

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், மகாராஷ்டிர அரசு புனே, நாக்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தியவையாக மீரா பயந்தர் மாநகராட்சியின் கீழ் வரும் மும்பையின் சில புறநகர் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மீரா பயந்தர் மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட்களில் மார்ச் 31 வரை ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு இந்த ஹாட்ஸ்பாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், ஐந்து ஹாட்ஸ்பாட்களை பட்டியலிட்டுள்ளது.
 
 
ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்த மகாராஷ்டிரா நிர்வாகம், மீரா பயந்தர் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்றும், பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார நிர்வாகம் அயராது உழைத்து வருவதாகவும் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தி, அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் கொரோனா விதிகளை திறம்பட அமல்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறித்து முடிவுகளை எடுக்க அங்கீகரித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 
மீரா பயந்தர் பகுதியில் நேற்று 68 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டதன் மூலம், அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 29,480 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 669 ஆக உள்ளது.
இதற்கிடையே மும்பை இன்னும் எந்த ஊரடங்கையும் அறிவிக்கவில்லை. ஆனால் அதிகரித்து வரும் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பரந்த அளவிலான சோதனை மற்றும் தடமறிதலில் கவனம் செலுத்துவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
 
மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள்:

ஜல்கான்: மார்ச் 15 வரை ஊரடங்கு அமல்.
அவுரங்காபாத்: வார இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு. அடுத்த ஏழு நாட்களுக்கு ஏபிஎம்சி’களும் மூடப்பட்டுள்ளன.
 
 
நாக்பூர்: மார்ச் 15 முதல் 21 வரை ஊரடங்கு. அத்தியாவசிய சேவைகள் மற்றும் தொழில்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி. நாக்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் 25% திறனுடன் செயல்படும்.
புனே: இரவு 11 முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல். பள்ளி மற்றும் கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஹோட்டல்களும் பார்களும் மூடப்பட்டுள்ளன. பூங்காக்களும் மூடப்படும்.
 
 
அகோலா: நேற்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ஊரடங்கு அமல். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி.
நாசிக்: இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அமல். திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளில் 25-30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. மார்ச் 15’க்குப் பிறகு அரங்குகளில் திருமணங்கள் இல்லை. 50% திறனுடன் ஹோட்டல்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மத இடங்கள் மூடப்பட வேண்டும்.
 
 
உஸ்மானாபாத்: இரவு 9 முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல். வாராந்திர சந்தைகள் மூடப்பட்டு இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு அமல். அதிகபட்சம் 5 பேர் மத நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஜிம்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் 50% திறனுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!