திமுகவுக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வி அமையும் : பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன்!!

மதுரை : தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் தோல்வி அடையும் அதிமுகவின் ஆட்சி மீண்டும் மலரும் என மதுரை வடக்கு பாஜக வேட்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாரதிய ஜனதா வேட்பாளராக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார், இதனை முன்னிட்டு மதுரையில் தனியார் ஓட்டலில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
இதனைத் தொடர்ந்து சரவணன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; மதுரை வடக்கு தொகுதியில் தாமரை நிச்சயமாக மலரும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றினார், அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. வாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றினேன். அப்போது என் சொந்த காசை செலவு செய்து பல்வேறு மக்கள் நலத் திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளேன்.
 
 
நான் பாரதிய ஜனதா மேலிடத்திடம் திரைமறைவில் பேரம் பேசியதால் எனக்கு சீட் மறுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு. திமுகவில் தவறுகளை மறைப்பதற்காக இப்படி பொய் சொல்லி வருகின்றனர்.
நான் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பாரதிய ஜனதாவில் சேர்ந்து உள்ளேன். மதுரையில் எனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் இப்போது எங்களுக்காக தேர்தல் வேலை செய்து வருகின்றனர்.
 
 
தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் தோல்வி அடையும் அதிமுகவின் ஆட்சி மீண்டும் மலரும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் எனக்கு சீட் மறுக்கப்பட்ட போது எனது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களும் கூடிய விரைவில் பாரதிய ஜனதாவில் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!