தேர்தல் களம் விறு விறு: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இதுவரை 192 பேர் மனுத்தாக்கல்..!!

சேலம்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 17 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட இதுவரை 192 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதால் இதை முன்னிட்டு கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
 
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மார்ச் 19ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 17 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.
இந்த தொகுதிகளில் இதுவரை கெங்கவல்லியில் 11 பேர், ஆத்தூரில் 5 பேர், ஏற்காட்டில் 7 பேர், ஓமலூரில் 12 பேர், மேட்டூரில் 11 பேர், எடப்பாடியில் 16 பேர், சங்ககிரியில் 10 பேர், சேலம் மேற்கில் 14 பேர், சேலம் வடக்கில் 14 பேர், சேலம் தெற்கில் 17 பேர், வீரபாண்டியில் 6 பேர் என மொத்தம் 123 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
 
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ராசிபுரத்தில் 8 பேர் , சேந்தமங்கலத்தில் 10 பேர், நாமக்கல்லில் 10 பேர், பரமத்திவேலூரில் 13 பேர், திருச்செங்கோட்டில் 17 பேர், குமாரபாளையத்தில் 11 பேர் என்று மொத்தம் 69 பேர் மனு தாக்கல் செய்துள்ளார்கள். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 192 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!