ஏன் அம்பயர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை என எனக்குப் புரியவில்லை: சர்ச்சை முடிவுக்குக் கொந்தளித்த கோலி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது போட்டியில் சர்ச்சைக்குரிய சூரியகுமார் யாதவின் அவுட் குறித்து கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டி-20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-2 என இந்திய அணி சமன் செய்தது. இரு அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி நாளை ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு களத்தில் இருந்த அவர்கள் அவுட் என அறிவித்தனர்.
 
 
ஆனால் அவர்களுக்கு இங்கிலாந்து வீரர்களான தாவித மலான், அடில் ரசித் ஆகியோர் பிடித்த கேட்ச்சை, மூன்றாவது அம்பயர் ரீப்ளேவின் ஆய்வு செய்தபோது அது அவுட் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் களத்திலிருந்த அம்பயர்கள் அவுட் கொடுத்ததால், அதை மாற்றுவதற்கு போதிய ஆதாரம் இல்லை என்ற அடிப்படையில் மூன்றாவது அம்பயரும் அவுட் எனச் சொல்ல நேர்ந்தது. இது தற்போது மிகப்பெரிய விவாத மேடை ஆகவே மாறி உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய முடிவை எதிர்த்து டிவிட்டரில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் இது குறித்துப் பேசிய இந்திய கேப்டன் கோலி அம்பயர்களுக்கு தெரியவில்லை என்ற ஒரு வாய்ப்பு இல்லாதது ஏன் என்று எனக்குப் புரியவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரகானே ஒரு கேட்ச் பிடித்தார். ஆனால் அது முறையான இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை என்று கூறினார். அப்போது அந்த இடத்தில் களத்திலிருந்த அம்பயர்கள் கொடுத்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
 
 
ஆனால் எனக்குத் தெரியவில்லை என்ற ஒரு வாய்ப்பு அம்பயர்களிடம் இல்லை என்று ஏன் எனக்குப் புரியவில்லை. முழுமையாக 100 சதவீதம் முடிவு தெரியவில்லை என்று வரும் பொழுது அந்த முடிவு எப்படிச் சரியானதாக இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. இது டிஆர்எஸ் முறையில் உள்ள அம்பயர்ஸ் கால் முடிவுக்கும் பொருந்தும். கிரிக்கெட்டை 100 சதவீதம் சிறந்ததாக மாற்ற இதுபோன்ற சர்ச்சையான முடிவுகளை நீக்குவது அவசியம் என்று நான் உணர்கிறேன். ஆனால் களத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம்” என்றார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!