கேப்டன் கோலி சொன்ன ஒரு வார்த்தை … இப்ப நாடு முழுதும் இதே பேச்சுதான்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பேட்டிங் வரிசை குறித்து தற்போதே பேசுவது சரியாக இருக்காது என இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராகக் களம் இறங்கினார். இது இந்திய அணிக்கு கைமேல் பலன் அளித்தது. இதையடுத்து போட்டி முடிந்த பின் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராகக் களம் இறங்கு அதிக ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் தான் துவக்க வீரராகக் களமிறங்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார் கோலி.
 
 
கோலி முன்னதாக களமிறங்கியதால் மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கே எல் ராகுலுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதால் இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக கோ லி களமிறங்குவது சரியான முடிவுதானா என்பது மிகப்பெரிய விவாதமாகவே மாறி உள்ளது எனலாம்.
புனே சென்றடைந்த இந்திய அணி: நாளை துவங்கும் ஒருநாள் தொடர்!
 
 
குறிப்பாக உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து விட்டால், பின் வரிசையில் பேட்டிங் செய்ய சிறந்த வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் நிலை ஏற்படும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பேட்டிங் வரிசை குறித்து தற்போது பேசுவது சரியாக இருக்காது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், “உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. அதனால் தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்துப் பேசுவது சிறந்ததாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதைப் பொறுத்து இந்த முடிவு எடுக்கப்பட வேண்டியது. இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க வேண்டும் என்ற நிலையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
 
ரோகித்துடன் ஓப்பனிங் கூட்டணி ஏன்? :‘கிங்’கோலி சொன்ன பதில் என்ன தெரியுமா?
அதனால் ஒரு பேட்ஸ்மேனை வெளியேற்ற வேண்டிய நிலை இருந்ததே இதற்குக் காரணம். இது மிகவும் கடினமான முடிவுதான். அதேபோல உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக மேலும் சில டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்பதையும் கேள்விப்பட்டேன். அதனால் சிறந்த லெவன் அணியைத் தேர்வு செய்ய இன்னும் இந்திய அணியின் கையில் அவகாசம் உள்ளது” என்றார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!