சீனா மற்றும் ரஷ்யா கூட்டணி: சந்திரனில் விண்வெளி ஆய்வு மையம்!

ரஷ்ய நாட்டின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் ஆகியவை இணைந்து சந்திரனின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் விண்வெளி ஆய்வு மையங்களை அமைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இரு நாடுகளின் விண்வெளி நிறுவனங்களின் அறிக்கையில், இது மற்ற நாடுகளின் பயன்பாட்டிற்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
ரஷ்யா தனது முதல் மனித விண்வெளி பயணத்தின் 60 வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் அதே வேளையில் இந்த தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த சர்வதேச அறிவியல் சந்திர ஆய்வு மையம் (International Scientific Lunar Station) நிலவைக் குறித்து பல்வேறு வகையான அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்றும் இருநாட்டு நிறுவனங்களின் அறிக்கையும் தெரிவித்துள்ளது.
 
 
இந்த சந்திர ஆய்வு மையத்தின் திட்டமிடல், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடு என அனைத்திலும் ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளும் கூட்டணியுடன் பணியாற்ற திட்டமிட்டுள்ளது.
விண்வெளி ஆய்வைப் பொறுத்தவரையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா சற்று தாமதமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. ஆனால், சீனாவின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வென்றால், கடந்த டிசம்பரில் அதன் சாங்கே-5 விண்கலம் சந்திரனில் இருந்து வெற்றிகரமாக பாறை மற்றும் மண்ணை பூமிக்குக் கொண்டு வந்ததுதான். 
 
 
விண்வெளி ஆய்வுகளில் முன்னோடியாக இருந்துவரும் ரஷ்யாவுக்கு இப்போது சீனாவும் அமெரிக்காவும் மிகப்பெரிய சவால்களையும் போட்டிகளையும் கொடுக்கின்றன. அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ரஷ்யாவுக்குக் கடும் போட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!