பிரேசிலை அதிர வைக்கும் கொரோனா: ஒரே நாளில் 3,668 பேர் உயிரிழப்பு..!!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,668 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,87,95,232 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,15,854 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
 
 
பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,668 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.10 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 12.70 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இதன்மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!