தீவிரமடையும் கொரோனா: பிரான்சில் ஒரு மாதத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு..!!

பாரிஸ்: கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை பேராபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரசின் 3வது அலை பரவியுள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 42 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவித்த இமானுவேல் மேக்ரான், ‘தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம். தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும்’ என்றார். மேலும், மே மாதம் நடுப்பகுதியில் நாட்டில் சகஜ நிலை திரும்பும் என நம்புவதாகவும் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
 
 
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் படி, பகல் நேரத்தில் மக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றளவு மட்டுமே செல்ல முடியும். அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!