இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர் நடை, பேச்சு, ஸ்டைல் எல்லாமே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து இழுக்கக் கூடியது.
1975ல் நடிக்கத் துவங்கிய இந்த Race குதிரையான ரஜினி அன்று முதல் இன்று வரை வேகம் கூடிகொண்டே போகிறது. ஆம், 70 வயதில், இன்னும் வணிக ரீதியாக கிங். ரஜினிகாந்த் தன்னை மீண்டும் புதுப்பிக்க சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு இந்த வயதிலும் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். 20 வருடத்திற்கு முன்பு அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர்களை பாருங்கள். பி வாசு, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் போன்ற தனது வழக்கமான வெற்றிப்பட இயக்குனர்களுடன் பணிபுரிந்த பிறகும், அவர் பா. ரஞ்சித் எனும் இளம் இயக்குனருடன் பணிபுரிந்தார். ரஞ்சித் ( கபாலி மற்றும் காலா ) மற்றும் கார்த்திக் சுப்பராஜ் (பேட்ட). ரஜினிகாந்த் அதன் பிறகு தர்பாரில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்தார். அது மட்டும்மல்ல அண்ணாத்த என்னும் கிராமத்து மாஸ் ஆக்ஷன் படத்திலும் இயக்குனர் சிவாவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
நடுவில் இவரின் போதாத காலம், கட்சி ஆரம்பிக்கிறேன் என்று இறங்கி அதன்பின் உடல்நலக்குறைவால் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிக்கை ஒன்றைவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். தற்போது ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வரும் நிலையில், இந்தியாவில் மிகுந்த மரியாதைக்குரிய, மதிப்பிற்குரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி உள்ளார்கள்.
ஆம், திரைத்துறையில் 45 கால சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இஇந்த தகவலால், ரஜினி ரசிகர்களுக்கு ஜில்லுனு ஜிகர்தண்டா குடித்தது போல் இருக்கிறார்கள்.