கிரிக்கெட் வீரர் சச்சின் மருத்துவமனையில் அனுமதி : கொரோனா தொற்று தீவிரமடைந்ததாக தகவல்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அண்மையில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். அதில், அவர் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார். இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
 
 
கொரோனா அறிகுறிகள் இருந்ததால், பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
கொரோனா தடுப்பு விதிகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது, சச்சின் டெண்டுல்கருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
 
 
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றின் தாக்கம் வீரியமடைந்ததால், மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக சொல்லப்படுகிறது. அவர் விரைந்து குணம்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!