தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் குமரிக்கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல சுழற்சியாலும், உள்கர்நாடகம் வரை காணப்படும் காற்றழுத்த தாழ்வு காரணமாக குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களல் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைம் கூறியுள்ளது.
ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும என குறிப்பிட்டுள்ளது.
திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் இன்று இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடும் எச்சரித்துள்ளது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!