20க்கு 20ல் நிச்சயம் பாஜக வெற்றி : பழனியில் பாஜக தலைவர் முருகன் பேட்டி!!

திண்டுக்கல்அதிமுக கூட்டணியில் பாஜக 20க்கு 20 இடங்களை கைப்பற்றும் என்று பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு இன்று பாஜக மாநில தலைவர் முருகன் சாமி தரிசனம் செய்தார். தொடர்து தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அப்போது அவர் அதிமுக கூட்டணியில் பாஜக 20 க்கு 20 இடங்களையும் கைப்பற்றும் என்றும், தாராபுரத்தில் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் மாநிலத்தில் முருகனுடன் பாஜக நிர்வாகிகள் பலரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
காதல் மனைவியை கதற கதற கொன்ற கணவன் : தென்காசி அருகே நடந்த கோர சம்பவம்!!
தென்காசிகாதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் 3 வருடத்திற்கு முன் மல்லிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகோபால் தென்காசியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார்.
அதே போல மல்லிகா பொன்ராஜ் என்பவரின் கேபிள் அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையல் நேற்று மாலை திடீரென கேபிள் அலுவலகத்திற்குள் வந்த ராஜகோபால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மல்லிகாவை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த மல்லிகா சரிந்து விழுந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து தடுக்க வந்தது பக்கத்து வீட்டு பெண்ணையும் ராஜகோபால் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மல்லிகா உயிரிழந்த நிலையில், ஆபத்தான் நிலைமையில் பக்கத்து வீட்டுப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!