எமரால்டு கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : குடிநீர் வீணாகி செல்வதால் மக்கள் வேதனை

நீலகிரி : எமரால்டு கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி செல்வதால் குன்னூர் நகர மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு எமரால்டு பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் மக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டது. குன்னூர் பகுதியில் 28 நாட்களுக்கு ஒரு முறை குடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் எமரால்டு கூட்டு குடி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, குன்னூர் பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் குன்னூரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் பொது மக்களின் குடியிருப்புகளில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் பயன் உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருந்து போதிலும் குழாய்கள் அமைக்கும் போது முறையாக காங்கிரீட் அமைக்கப்படாததால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் வீணாகி செல்கின்றது. இந்த நிலையில் குன்னூர் பேருந்து நிலையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலந்து செல்வதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
ஆனால் இதனை பற்றி குடிநீர் வடிகால் வாரியமும், குன்னூர் நகராட்சி நிர்வாகமும் இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்கள்:

J.தியோடர்வினோத்.ஜாகீர்உசேன் -நீலகிரி

மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!