கொடியேற்றத்துடன் தொடங்கியது தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா: தேரோட்டம் ரத்து..!!

தஞ்சை: உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும்.
கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ரிஷிப சின்னம் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்த சித்திரைத் திருவிழா 18 நாட்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் நேற்று தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த 18 நாட்களிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கக் கோவிலின் உள்ளேயே சாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகள் மிகவும் எளிமையாக நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23ம் தேதி நடைபெற இருந்தது. தடை உத்தரவு காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!