நோயால் தப்பியவர் தீயால் பலியான சோகம் : பரிதவிக்க வைத்த காட்சி!!

திருப்பூர்உடல்நிலை குணமடைந்த நோயாளி வீடு திரும்பும் போது கார் திடீர் தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகேயுள்ள துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 52). இவர் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் குணமடைந்த ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோர் நேற்றிரவு கோவையிலிருந்து துடுப்பதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.
வரும் வழியில் பெருமாநல்லூர் பகுதியில் காரை நிறுத்திய ராஜா, ஜோதிமணி இருவரும் இறங்கி சிறுநீர் கழித்துள்ளனர். மீண்டும் காருக்கு வந்த ராஜா, காரை ஸ்டார்ட் செய்யும் பொழுது, காரிலிருந்து புகை வந்துள்ளது.
தொடர்ந்து கார் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. ராஜா, ஜோதிமணியும் உடனடியாக இறங்கி ரங்கராஜனை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிய துவங்கியதில், ரங்கராஜன் தீயில் எரிந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பெருமாநல்லூர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!