ஆர்சிபியை பின்னுக்கு தள்ளி நம்பர் – 1 இடத்திற்கு முன்னேறிய சிஎஸ்கே!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 23லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எட்டியது.
இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் நேற்று வரை 23லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பின்னுக்கு தள்ளி மீண்டும் நம்பர் -1 இடத்தை எட்டியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பதைப் பார்க்கலாம். இந்நிலையில் சென்னை அணி (10 புள்ளிகள்) நம்பர்-1 இடத்திலும், பெங்களூருஅணி இரண்டாவது இடத்திலும் (10 புள்ளிகள்), டெல்லி கேபிடல்ஸ் அணி (8 புள்ளிகள்) 3வது இடத்திலும், மும்பை அணி 4வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழாவது மற்றும் கடைசி இடத்தில் உள்ளன.
இதேபோல அதிக ரன்கள் விளாசிய வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டூபிளசி வசம் உள்ளது. இவர் 6 போட்டியில் சேர்த்து 270 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து டெல்லி கேபிடஸ்ல் அணியின் ஷிகர் தவான் (265) இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கே எல் ராகுல் (240) மூன்றாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கிளன் மேக்ஸ்வெல் (223) நான்காவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் (218) 5வது இடத்திலும் உள்ளனர்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களுக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப் ராயல் சாலஞச்ர்ஸ் பெங்களூரு வீரர் ஹர்ஷால் படேல் (17 விக்கெட்) வசம் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அவேஷ் கான் (12), மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ரசித் கானும் (9 விக்கெட்), நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ராகுல் சஹார் (9) ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் கிறிஸ் மோரிஸ் (9) ஆகியோர் உள்ளனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!