“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு இலவச கல்வி அளிக்க தயார்” : காவல் ஆய்வாளர் பதிவு..!

கோவை: கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக கோவை சேர்ந்து காவல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கோவையில் பீளமேடு, போத்தனூர் , உக்கடம் சரவணம்பட்டி ஆகிய வெவ்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சாஸ்தா.தற்போது ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் ஏற்கனவே, மாநகராட்சி பள்ளியில் படித்து மருத்துவ படிப்பிற்கு பணம் கட்ட முடியாத மாணவருக்கு உதவுவதாக அறிவித்திருந்தார் இவரது அறிவிப்பை அடுத்து பல காவல் அதிகாரிகள் ஏழை மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்.இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 
 
இதுகுறித்து அவர் தனது கூறுகையில், “அனைவருக்கும் வணக்கம் கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் யாரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கவும். அவர்களுக்கான முழு கல்விச்செலவையும் ஏற்கிறேன்.” என்று தெரிவித்ததோடு, தனது தொலைபேசி எண்ணையும் (9655209000) கொடுத்துள்ளார். வைரஸ் தொற்றால் தாய் தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு, இத்தகையை உள்ளங்கள் உதவி செய்ய முன்வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!